வறுமையை ஒழிப்பதற்கு கல்வியே சிறந்த ஆயுதம்.

17

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பெரியோர்களாக இந்நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு கல்வியே. நிலம், சொத்து, கார், வாகனங்கள் திருடப்படலாம், ஆனால் கல்வியால் பெற்ற அறிவை யாராலும் திருட முடியாது. நாட்டில் பாதி பேர் வறியோர்வளாக மாறிவிட்ட வேளையில் அந்த வறுமையை போக்க கல்வியை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என அனைத்து மதங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வலுவூட்டப்பட வேண்டும். சாதி, மத பேதங்களை ஒதுக்கிவிட்டு, இந்நோக்கத்திற்காக சாதி மதங்களை புறமொதுக்கி செயற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

76 வருட ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு,
அரசாங்க அதிகாரம்,அரசாங்க பதவிகள் ஏதுமின்றி நாட்டுக்காக சேவை செய்த ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 138 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,வவுனியா, செட்டிக்குளம், அருவித்தோட்டம், சிவானந்தா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மார்ச் 28 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

வலையொளி இணைப்பு-

Join Our WhatsApp Group