அமெரிக்க உறவில் விரிசல்: தனித்து செயல்பட இஸ்ரேல் முடிவு

23

காஸாவின் தெற்கு எல்லை நகரமான ராபாவில் தரைவழி ராணுவ தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தினால் அங்குள்ள மக்கள் பிராந்தியத்தின் வேறு இடங்களுக்கு நகர்ந்து செல்வார்கள் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனால் மிகப்பெரிய மனித அழிவுக்கான அபாயம் ஏற்படலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வருகிற நிலையில் நெதன்யாகு இவ்வாறு கூறியுள்ளார்.

காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் பகுதிக்கும் மேற்பட்ட மக்கள் ராபாவின் தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ள நிலையில், போரில் இருந்து மக்கள் எளிதாக தள்ளிச் செல்ல முடியும் என நெதன்யாகு கூறியுள்ளார்.

ராபா விவகாரம் குறித்த முரண், நட்பு நாடுகளுக்கு இடையேயான விரிசல்களில் மற்றுமொன்று எனத் தெரிவித்தவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான மத்திய காஸாவுக்கு மக்களை இடம்பெயர செய்ய அறிவுறுத்தும் திட்டம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group