புனித வெள்ளி: இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

16

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினங்களுக்கு இலங்கையில் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 29) நினைவுகூரப்படும் புனித வெள்ளி மற்றும் இந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31, 2024 அன்று கொண்டாடப்படும் ஈஸ்டர் ஞாயிறு ஆகியவற்றிற்காக தேவாலயங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக விசேட பொலிஸ் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் மொத்தமுள்ள 2,978 தேவாலயங்களில் 2,239 தேவாலயங்களில் குறித்த நாட்களில் மத அனுஷ்டானங்கள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மத வழிபாடுகள் நடைபெற உள்ள சுமார் 2,253 தேவாலயங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, முப்படையினரின் உதவியும் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp Group