ஒரே ரன்வேயில் ஓடிய இரு விமானங்கள்: மோதலில் உயிர் தப்பிய பயணிகள்

24

கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

Join Our WhatsApp Group