ஊழல் – பா.ஜ.க. அரசை கடுமையாக சாடிய இந்திய நிதியமைச்சரின் கணவர்

22

தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும்.

அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது.

இந்தியாவில் விரைவில் பாரளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், பிரசாரம் என தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் சட்டம் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கின.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை எவ்வளவு, யார்யார் நன்கொடை வழங்கினர் என்ற தகவல்கள் தினந்தோறும் செய்திகளாகி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தனது கருத்துக்களை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் காரணமாக பா.ஜ.க. மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையே தான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது.”

“தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும். இந்த விவகாரம் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக சென்றடைய துவங்கிவிட்டது. அனைவருக்கும் இந்த தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய துவங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

Join Our WhatsApp Group