209 இலக்கை நெருங்கிய ஐதராபாத்: 4ரன்னில் கொல்கத்தா த்ரில் வெற்றி*

20

209 இலக்கை நெருங்கிய ஐதராபாத்: 4 ரன்னில் கொல்கத்தா த்ரில் வெற்றி
209 இலக்கை நெருங்கிய ஐதராபாத்: 4 ஓட்டங்களில் கொல்கத்தா த்ரில் வெற்றி

19-வது ஓவரில் ஸ்டார்க் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தி அணியைக்கு த்ரில் வெற்றியை தேடிக்கொடுத்தார்.
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆந்த்ரே ரஸல் 7 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 25 பந்தில் 64 ரன்கள் விளாசினார்.

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் (21 பந்தில் 32 ரன்), அபிஷேக் ஷர்மா (19 பந்தில் 32 ரன்) தங்களது பங்களிப்பை கொடுத்தனர்.

அடுத்து வந்த திரிபாதி 20 பந்தில் 20 ரன்களும், மார்கிராம் 13 பந்தில் 18 ரன்களும், அப்துல் சமாத் 11 பந்தில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு ஹென்ரிச் கிளாசன் உடன் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 19 பந்தில் 64 ரன்கள் தேவைப்பட்டது.

18-வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரில் கிளாசன் 2 சிக்ஸ், ஷபாஸ் ஒரு சிக்ஸ் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது.

கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் 3 சிக்ஸ், ஷபாஸ் அகமது ஒரு சிக்ஸ் அடிக்க 26 ரன்கள் வழங்கினார் ஸ்டார்க். அத்துடன் கிளாசன் 25 பந்தில் அரைசதம் விளாசினார்.

இதனால் கடைசி ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை கிளாசன் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஐந்து பந்தில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஹர்ஷித் ராணா 3-வது பந்தில் ஷபாஸ் அகமதுவையும் (5 பந்தில் 16 ரன்), 5-வது பந்தில் கிளாசனையும் (29 பந்தில் 63 ரன்) வீழ்த்தினார். இதனால் கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை டாட் பந்தாக வீச கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.

ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ராணா 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Join Our WhatsApp Group