விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விராட் கோலி – Vibe ஆன சேப்பாக்..

28

சென்னை, பெங்களூரு அணிகள் களம்கண்டன.
பெங்களூரு அணி 173 ரன்களை குவித்தது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பிரமாண்ட துவக்க விழாவுடன் நேற்று (மார்ச் 22) துவங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் போட்டியில் களம்கண்டன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. பேட்டிங்கின் போது துவக்கத்தில் அதிரடி காட்டிய பெங்களூரு அணி ஒருக்கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், இன்னிங்ஸ் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்தது. சென்னை அணி பேட்டிங் செய்த போது, ஃபீல்டிங் செய்த விராட் கோலி ரசிகர்களை மகிழ்வித்தார். சென்னையில் நடைபெற்ற போட்டியின் போது, மைதானத்தில் தமிழ் பாடல்கள் அதிகளவில் இசைக்கப்பட்டது.

அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த கில்லி படத்தின் “அப்படி போடு” பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. இந்த பாட்டை கேட்ட விராட் உடனே வைப் ஆகி நடனம் ஆடினார். இதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். “அப்படி போடு” பாடலுக்கு விராட் கோலி போட்ட குத்தாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது.

Join Our WhatsApp Group