நடிகை மும்தாஜுக்கு விருது கொடுத்த தமிழிசை சவுந்திரராஜன்..

45

சினிமாவை விட்டு விலகிய நடிகை மும்தாஜுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா ஒன்றில் தெலங்கானாவின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விருது கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

“மல.. மல.. மருதமலை” என டவல் உடன் ஆட்டம் போட்ட மும்தாஜ் 43 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். மேலும், கவர்ச்சி உடைகளை எல்லாம் அணிவதை விட்டு விட்டு இஸ்லாமிய மார்கத்தை முழுமையாக தழுவிய அவர் புர்கா உடையிலேயே வலம் வருகிறார்.

நடிகை மும்தாஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசியாக ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறினார். ஆனால், அந்த சீசனில் அவருக்கு டைட்டில் கிடைக்கவில்லை. அதன் பின்னர் எந்தவொரு மீடியாவிலும் தலை காட்டாமல் இருந்து வந்த மும்தாஜ் அடிக்கடி சோஷியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இயக்குநர் டி. ராஜேந்தர் 1999ம் ஆண்டு இயக்கி நடித்த மோனிஷா என் மோனாலிஸா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மும்தாஜ். அடுத்து சத்யராஜ் நடித்து வெளியான மலபார் போலீஸ், விஜய்யின் குஷி, பிரசாந்த் உடன் ஸ்டார், சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மும்தாஜ் 43 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார்.

சினிமாவை விட்டு விலகியது ஏன்?: “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட மும்தாஜ் தற்போது இஸ்லாமிய மார்கத்தை தழுவிய நிலையில், சினிமாவை விட்டு விலகியதாக அறிவித்துள்ளார். அல்லாஹ்வின் அருள் தனக்கு கிடைத்த நிலையில், இனிமேல் கவர்ச்சி உடைகளை அணியக் கூடாது என்கிற முடிவெடுத்த நிலையில், சினிமாவை விட்டும் விலகி விட்டேன் எனக் கூறியுள்ளார்.

காமெடி நடிகர்களான ஆர்த்தி மற்றும் கணேஷ் சமீபத்தில் நடத்திய மகளிர் தின விழாவில் நடிகை மும்தாஜுக்கு ரைஸிங் ஸ்டார்ஸ் விருதினை தெலங்கானாவின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

அந்த விழாவிலும் புர்காவை அணிந்துக் கொண்டு நடிகை மும்தாஜ் விருது பெற்ற புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். மீண்டும் சினிமா அல்லது சின்னத்திரையில் களமிறங்கி மும்தாஜ் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Join Our WhatsApp Group