ஆஸ்கர் விருதுகளை குவித்த “ஓபன்ஹெய்மர்”

23

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட ஐந்து விருதுகளை வென்றுள்ளது.
புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதை வென்றுள்ளது.
96-வது ஆஸ்கர் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஓபன்ஹெய்மர் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட நான்கு விருதுகளை வென்றுள்ளது. அதேபோல் சிறந்த நடிகர் விருதையும் வென்றுள்ளது. அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி (Cillian Murphy) இந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். சிறந்த இயக்குனர் விருதையும் ஓபன் ஹெய்மர் வென்றுள்ளது. அந்த படத்தினர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார்.

அதேபோல் புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்காக விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகை விருது வென்ற எம்மா ஸ்டோன்

சிறந்த ஆவண குறும்படம் விருதை தி லாஸ்ட் ரிப்பைர் ஷாப் படம் வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படமாக 20 டேஸ் இன் மரியுபோல் என்ற படம் வென்றுள்ளது. சிறந்த லைவ்-ஆக்சன் படமாக தி வொண்டர்புல் ஸ்டோரி ஆஃப் ஹென்ஹி சுகர் படம் வென்றுள்ளது.

சிறந்த அனிமேசன் குறும் படமாக வார் இஸ் ஓவர்! பை தி மியூசிக் ஆப் ஷான் அண்டு யோகோ படம் வென்றுள்ளது.

சிறந்த அனிமேசன் படமாக தி பாய் அண்டு தி ஹெரோன் படம் வென்றுள்ளது.

Join Our WhatsApp Group