அரச இலக்கிய விருது விழா: மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

22

2024 அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக நூல்களை சமர்ப்பித்தல் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக இலங்கை எழுத்தாளர்களுக்கும் மற்றும் நூல் வெளியீட்டாளர் களுக்கும் இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட நூல்களை மதிப்பீடு செய்யும் போது அதனை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்கில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தமது நூல்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 31 ஆம் வரையிலான
காலப்பகுதியில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டதும் 49 பக்கங்களுக்கு குறையாததுமான அச்சிடப்பட்ட நூலின் மூன்று (3) பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்பட வேண்டிய நூல்களை,

‘அரச இலக்கிய ஆலோசனைக் குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை’ என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கிடைக்கச் செய்யலாம்.

நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினம் 2024 மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஆகும்.

அரச விருது வழங்கலுக்காக நூல்களை மதிப்பீடு செய்வதற்கு கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரமான நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சுய நாவல், சுய சிறுகதை தொகுப்பு, சுய கவிதை தொகுப்பு, சுய இளையோர் இலக்கியம் , சுய பாடலாக்கத் தொகுப்பு, சுய நாடக இலக்கியம் , சுய அறிவியல் புனைகதை, சுய சிறுவர் இலக்கியம் (16 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்) , சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் நூல் , சுய இலக்கிய திறனாய்வு, சுய ஒலி-ஒளி படைப்பு பிரதியாக்க நூல் , சுய நானாவித விடய நூல்கள் , மொழிபெயர்ப்பு – நாவல் , மொழிபெயர்ப்பு – சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு – கவிதை தொகுப்பு, மொழிபெயர்ப்பு – நாடகம் , மொழிபெயர்ப்பு – புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் நூல் , மொழிபெயர்ப்பு – நானாவித விடய நூல்கள் , மொழிபெயர்ப்பு – இளையோர் இலக்கியம் , மொழிபெயர்ப்பு – சிறுவர் இலக்கியம் , மொழிபெயர்ப்பு – இலக்கிய திறனாய்வு நூல் , மொழிபெயர்ப்பு – ஒலிஃஒளி படைப்பு பிரதியாக்க நூல் ஒழுங்கமைப்புக்கு ஏற்றவாறு விண்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களுக்காக தொடர்பு கொள்ளவும் -தொ.பே.: 011-2872030 அல்லது 011-2872031 கலாசார அலுவல்கள் பணிப்பாளர் கலாசார அலுவல்கள் திணைக்களம் 8ம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல

தகவல் – கலாசார அமைச்சு

Join Our WhatsApp Group