நீல அட்டையை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரித்தது FIFA

18

காற்பந்து விளையாட்டில் புதிய நீல அட்டையைப் பயன்படுத்தும் யோசனையை FIFA எனும் உலகக் காற்பந்துச் சம்மேளனம் நிராகரித்திருக்கிறது.அனைத்துலகக் காற்பந்துச் சங்க வாரியம் அந்த யோசனையை முன்வைத்தது.

FIFA தலைவர கியானி இன்பான்ட்டினோ (Gianni Infantino) நீல அட்டைக்கு இடமில்லை என்று சொல்லிவிட்டார்.ஏற்கனவே காற்பந்தில் மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டை உள்ளது.ஆட்டத்தின்போது நடுவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அல்லது மோசமாக ஆடும் விளையாட்டாளருக்கு நீல அட்டை கொடுத்து அவரைப் பத்து நிமிடம் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றலாம் என்று ஸ்காட்லந்தில் நடைபெற்ற காற்பந்துச் சங்க வாரியத்தில் பேசப்பட்டது.ஆனால் அது தேவையில்லை என்று FIFA கூறிவிட்டது.

Join Our WhatsApp Group