பாரிஸ் ஒலிம்பிக் போட்டி – பாதுகாப்புத் திட்டங்கள் களவு போயின

18

இவ்வாண்டு பிரான்சின் பாரிஸ் (Paris) நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டிருந்த பை களவு போனது.பையில் ஒரு கணினியும் இரண்டு USB நினைவுச் சில்லுகளும் இருந்தன.பாரிஸின் Gare du Nord ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் இருந்து அது திருடப்பட்டது.அந்தப் பை, பாரிஸ் நகர மண்டபத்தில் பணிபுரியும் பொறியாளருக்குச் சொந்தமானது.

அவர் அதைத் தமது இருக்கைக்கு மேலே உள்ள பகுதியில் வைத்திருந்ததாக அந்நகரின் காவல்துறை தெரிவித்தது.அவர் பயணம் செய்யவிருந்த ரயில் தாமதமடைந்ததால் வேறொரு ரயிலுக்கு மாறினார்.அப்போது பை திருடு போனதை அவர் உணர்ந்தார்.சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

Join Our WhatsApp Group