தாய்ப்பால் கொடுக்கும் வீராங்கனைகளுக்குத் தனி ஹோட்டல் அறை” – ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு

18

பாரிஸில் இடம்பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடும் தாய்ப்பால் கொடுக்கும் பிரெஞ்சு வீராங்கனைகள் ஹோட்டலில் தங்க வசதி செய்து கொடுக்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.Athletes Village எனும் விளையாட்டாளர்க் கிராமப் பகுதியில் பிள்ளைகளுக்கு அனுமதியில்லாததால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடுவோர் அங்குதான் தங்குவர்.புதிதாகத் தாயான வீராங்கனைகள் தங்களுடைய தேவைகள் கவனிக்கப்பட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கைக்கு ஒலிம்பிக் குழு செவிசாய்த்துள்ளது.

குறிப்பாக பிரெஞ்சு ஜுடோ (Judo) வீராங்கனை கிளெரிஸ் அக்பெக்னெனு (Clarisse Agbegnenou) அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.ஹோட்டல், Athletes Village பகுதிக்கு அருகில் இருக்கும்.அவ்வாறு செய்வதால் வீராங்கனைகள் குழந்தையோடு உறங்கலாம் அல்லது தந்தை குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியும் என்றது குழு.பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும்.உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும்.

Join Our WhatsApp Group