டொனால்ட் டிரம்ப்பிற்கு 355 மில்லியன் டாலர் அபராதம்

20

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 355 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நியூயார்க் நகர நீதிபதி ஆர்தர் எங்கோரோன் உத்தரவிட்டுள்ளார். அதோடு டிரம்ப் நியூயார்க் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராக டிரம்ப் மூன்று ஆண்டுகளுக்குச் செயல்படவும் நீதிபதி தடை விதித்தார்.கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்பை மோசடியாக அதிகரித்துக் காட்டியதாக டிரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய டிரம்ப்பின் இரு மகன்களும் தலா 4 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, நிறுவனத்தின் இயக்குநர்களாக அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படவும் தடை விதித்தார்.அதேவேளை இந்த மோசடி குற்றச்சாட்டை முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மகன்கள் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group