இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது

13

சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.

இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜெயந்த் சவுத்ரி தலைமையில் ராஷ்டீரிய லோக்தள் (ஆர்எல்டி) கட்சி இயங்கி வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனான ஜெயந்த் சவுத்ரிக்கு உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜாட்யின மக்களின் ஆதரவு உள்ளது.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து ராஷ்டீரிய லோக்தள் கட்சி செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.

சமீபத்தில் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜெயந்த் சவுத்ரி நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவரது ராஷ்டீரிய லோக்தள் கட்சி அணிமாறும் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜெயந்த் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் பா.ஜ.க. தலைமையிலான அணியில் சேர முடிவு செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஜெயந்த் சவுத்ரிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. எனவே அந்த தொகுதிகளில் சிலவற்றை அவரது கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கும் என்று தெரிகிறது.

Join Our WhatsApp Group