பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

14

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த நபர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என சடலத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 50 அல்லது 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இதுவரை இனம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Join Our WhatsApp Group