ஐ மிஸ் யூ தங்கச்சி.. பவதாரிணியை நினைத்து கலங்கும் வெங்கட்பிரபு!

12

இசையமைப்பாளர் இளையராஜா ஜீவா தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்களும், பவதாரிணி என்கிற ஒரே ஒரு மகள் இருந்தார். இவர் கல்லீரல் புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் உயிரிழந்த, நிலையில் பவதாரிணியின் பிறந்த நாளான இன்று வெங்கட்பிரபு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா, தனது மகன்களுக்கு இசை குறித்த ஞானத்தை ஊட்டி வளர்த்தது போல், தன்னுடைய மகளுக்கும் இளையராஜா சிறு வயதில் இருந்தே இசையையும், பாடல்களையும் ஊட்டி வளர்ந்தார். பவதாரணியை சிறு வயதிலேயே தான் இசையமைத்த மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற படத்திலும் பாடகியாக அறிமுகம் செய்தார்.

இதையடுத்து, பவதாரணி ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார். இதையடுத்து, 2000ம் ஆண்டு வெளியான பாரதி என்ற படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலை பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல், 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லாமல் எடுக்கப்பட்ட இலக்கம் என்னும் படத்தில் இசையமைத்ததற்காக அப்போதைய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இவரை பாராட்டினார்.

47 வயதாகும் பாவதாரிணிக்கு, சமீபத்தில் தான் கல்லீரல் புற்றுநோய் 4ஆவது ஸ்டேஜில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பித்தப்பையில் இருந்த கல் புற்றுநோயாக மாறி சிறுநீரகத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 5 மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார். இதில் எந்த பயன் அளிக்காத நிலையில், கடைசியாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது உடல் விமான மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, இளையராஜாவின் திநகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், மற்றும் பொதுமக்கள் பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலிக்கு பின் பவதாரணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேனி லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தோட்ட வளாகத்தில் தாய் மற்றும் பாட்டியின் சமாதிகள் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பவதாரிணியின் பிறந்த நாளான இன்று, இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பவதாரிணியுடன் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை பகிர்ந்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தங்கச்சி பவதாரிணி,நீ சிறந்த மகிழ்ச்சியான இடத்தில் இருப்பாய் என்று எங்களுக்கு தெரியும். யூ மிஸ் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் வெங்கட் பிரபுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Join Our WhatsApp Group