விவசாயிகளை அரசர்களாக்கும் சகாப்தம் உதயமாகும் : விவசாயிகள் மாநாட்டில் சஜித்.

18

இன்று நாட்டில் ஆட்சியில் இருக்கும் ரணில் ராஜபக்சவின் கூட்டு அரசாங்கம் இந்த நாட்டில் விவசாயிகள் வேதனையில் ஆழ்த்தி இருக்கும் வேளையில், விவசாயிகளை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது. அந்த வேலைத்திட்டத்தின் மூலம் உண்மையான வார்த்தையின் அர்த்தத்தில் விவசாயிகளை அரசனாக்கும் சகாப்தம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொல்பித்திகம பொது விளையாட்

டரங்கில் இன்று (11) நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

⏺️தேசிய நிலக் கொள்கை நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டில் சரியான நில பயன்பாட்டுத் திட்டம் இல்லாததால், நமது நாட்டின் அபிவிருத்தி முறை நிலையானதாக இருப்பதற்குப் பதிலாக முறைசாரா முறையில் செயல்படுத்தப்படுவதால், விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும், நாட்டின் திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கும் தேசிய நிலக் கொள்கையை உருவாக்கி, விவசாய நிலம், அபிவிருத்தி நிலம்,குடியிருப்பு நிலம், வனவிலங்கு நிலம் போன்றவற்றை முடிவு செய்ய வேண்டும்.அவ்வாறானதொன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டிலேயே நெற்செய்கையில் அதிக விளைச்சலைக் கொண்ட மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏக்கர்கணக்கான பயிர்ச்செய்கை நிலம், விமான நிலையத்துக்கு 5000, கிரிக்கெட் மைதானத்திற்கு 45 ஏக்கர், ஏனைய நிர்மானம் துறைமுகம் என அதிக அளவு நிலம் ஒதுக்கப்பட்டதால், யானை-மனித மோதல் மற்றும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அரசாங்கத்தின் தன்னிச்சையான கொள்கைகளினால் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

⏺️புதிய தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட விவசாய தலைமுறை

அறிவு, நவீன மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய 3 முறைகள் மூலம், விவசாயிகளின் அறுவடை மற்றும் உற்பத்தித் திறனை பன்மடங்காக அதிகரிக்க முடியும். உலகில் கிடைக்கும் புதிய தொழில்நுட்பம் நம் நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். குறைந்த நிலத்தில் குறைந்த செலவில் அதிக உற்பத்தி செய்ய முடியும், இதற்கு உலகில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

⏺️விவசாயி மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் ஒரு புதிய விலை சூத்திரம் மற்றும் விவசாயிகளுக்கான செயலி உருவாக்கப்படும்.

ஒரு கிலோ கரட்டுக்கு 2000 என்கிற போது நுவரெலியா பண்டாரவளை விவசாயிக்கு 500 ரூபாவே கிடைக்கின்றது. நாட்டு அரிசி கிலோ 92 ரூபா வழங்கப்படுகிறது ஆனால் சந்தையில் 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிது.சம்பா நெல் 106 ரூபா, சம்பா அரிசி 260 ரூபா இந்த அநீதி களையப்பட வேண்டும். விவசாயி மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் அநீதியை சரிசெய்யும் வகையில் புதிய விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.

விவசாயியையும் சந்தையையும் இணைத்து ஸ்மார்ட் விவசாயியை உருவாக்கி, விவசாயிகளுக்கான செயலி உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

⏺️ஸ்மார்ட் விவசாயிகளை உருவாக்கும் நவீன விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவோம்.

விவசாயத் திணைக்களம், கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக மேம்படுத்தப்பட்ட விவசாயத் தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம். இதன் மூலம், விவசாயிகள் மிகவும் பொருத்தமான பயிர்களை முடிவு செய்யலாம். வானிலை மற்றும் பிற தகவல்களை இதன் மூலம் பெறலாம். விவசாயிகளையும்,
விவசாயிகளின் பிள்ளைகளையும் ஸ்மார்ட் விவசாயிகளாகவும் பிள்ளைகளாகவும் மாற்றி நவீன விவசாயப் புரட்சி ஆரம்பிப்போம்.

⏺️ரணில் ராஜபக்ச அரசாங்கம் விவசாயிகளை மறந்தாலும்,நாம் மறக்கவில்லை.

உரங்கள் மற்றும் இதர விவசாய இடுபொருட்கள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள 18% வெட் வரியை நீக்குவோம். அறுவடைக் காலத்தில் அரிசி இறக்குமதிக்காக விதிக்கப்பட்ட 65 ரூபா வெளிநாட்டு பண்ட வரியை 1 ரூபாவாக அரசாங்கம் குறைத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் உற்பத்திக்கு நிலையான விலை கிடைப்பதில்லை. ரணில் ராஜபக்ச அரசாங்கம் 18 இலட்சம் விவசாயக் குடும்பங்களை மறந்து செயற்படுகின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

⏺️அரிசி ஆலை மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

ஒரு சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி ஆலை மாபியாவை நடத்தி விவசாயிகளையும் நுகர்வோரையும் அழித்து வருகின்றனர். ஹர்ஷ டி சில்வாவின் சக்தி வேலைத்திட்டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் வலுவூட்டப்பட்டனர். அந்தக் கொள்கையை மேலும் வலுப்படுத்தி சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தி வெள்ளை யானையாக மாறியுள்ள நகல் சந்தைப்படுத்தல் சபையை பலப்படுத்தி, தனியார் துறையும்,அரச துறையும் இணைந்து போட்டிச் சந்தையை உருவாக்கி நெல் விவசாயிகளை பாதுகாப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

⏺️விதை பாதுகாப்பிற்கான தேசிய கொள்கை

நமது நாட்டில் விதைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத்திட்டத்தை நாங்கள் கையாண்டு,இதற்காக அரசின் தலையீட்டை ஈடுபடுத்தி விதை உற்பத்தி செயல்முறை மேற்கொள்ளப்படும். இது தேசிய பாதுகாப்புக்கும் முக்கியமானது. இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டால், பாதுகாப்பின்மை ஏற்படும், எனவே விதைகள் மற்றும் நடவுப் பொருட்களுக்கு தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு, பொது மற்றும் தனியார் திட்டங்களுக்குள் பிரவேசிப்போம்.

⏺️தெளிவான தேசிய விவசாயக் கொள்கை

நாட்டில் தெளிவான தேசிய விவசாயக் கொள்கை இல்லாததால், வறட்சி காலங்களில் நீர் எடுக்க மின்சார அமைச்சரின் அனுமதி பெற வேண்டும். நமது நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நிலம் பயிரிடப்படுகிறது. 25 சதவீத பணியாளர்கள் இதற்கு பங்களிக்கின்றனர். 30000 குளங்கள் உட்பட அற்புதமான நீர்ப்பாசன கட்டமைப்பு இருந்தாலும் விவசாயத்தில் சரியான வளர்ச்சி இல்லை. இதனை மேம்படுத்தி, விவசாய சமூகத்தை பாதுகாக்கும் வகையில் தேசிய விவசாயக் கொள்கை ஸ்தாபிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

⏺️மீண்டும் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்

தொழில்முறை விவசாயிகளை உருவாக்கி, விவசாய ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டு, தொழில் சார் ஸ்மார்ட் விவசாயியை உருவாக்கும் திட்டம் ஸ்தாபிக்கப்படும். இப்பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகள் வழங்கப்படுவதுடன், விவசாயிகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் சமூக உடன்படிக்கையானது விவசாய ஜனாதிபதி செயலணியின் ஊடாக விவசாய சாசனத்தை நடைமுறைப்படுத்தி விவசாயிகள் கோலோச்சும் யுகத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்.

வலையொளி இணைப்பு-

Join Our WhatsApp Group