தவறான தீக்குச்சியைப் பயன்படுத்தியதால் உலகச் சாதனை படைக்கும் கனவு கலைந்தது…

26

8 ஆண்டுகள்….706,900 தீக்குச்சிகள்…..23 கிலோகிராம் பசை….பிரான்சைச் சேர்ந்த ரிச்சர்ட் பிலௌட் (Richard Plaud) இவை அனைத்தையும் பயன்படுத்தி ஆக உயரமான Eiffel கோபுரத்தைக் கட்டி கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்கத் திட்டமிட்டிருந்தார்.ஆனால் அவரது நீண்டநாள் கனவு கலைந்தது…..ரிச்சர்ட் சரியான தீக்குச்சிகளைப் பயன்படுத்தத் தவறியதால் அவர் கட்டிய கோபுரம் தகுதிபெறவில்லை என்று கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு தெரிவித்தது.

கோபுரத்தைக் கட்டும் இறுதிக் கட்டத்தில் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது.ரிச்சர்ட் கடைகளில் விற்பனையாகும் தீக்குச்சிகளைப் பயன்படுத்தாமல் உற்பத்தியாளர் கொடுத்த வேறு வகையான தீக்குச்சிகளைப் பயன்படுத்தியிருந்தார்.கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அதனை நிராகரித்தது.” இதனைக் கட்டுவது சுலபம் அல்ல. எனது கடின உழைப்பு, நேரம் இவை அனைத்தையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இது வருத்தத்திற்குரியது,” என்றார் ரிச்சர்ட்.

தற்போது ஆக உயரமான Eiffel கோபுரத்தைக் கட்டிய பெருமைக்குரியவர் லெபனானைச் (Lebanon) சேர்ந்த டௌபிக் டஹெர் (Toufic Daher).2009ஆம் ஆண்டில் சரியான தீக்குச்சிகளைப் பயன்படுத்தி அவர் 6.53 மீட்டர் உயரத்திற்கு Eiffel கோபுரத்தைக் கட்டி முடித்திருந்தார்.

Join Our WhatsApp Group