சனத் நிஷாந்தவின் இறுதி கிரியைகள் ஆராச்சிக்கட்டுவயில் 28-ம் திகதி

70

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (26) காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் வீதியின் பாதுகாப்பு வேலியிலும், அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியிலும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Join Our WhatsApp Group