திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் சடலம் மீட்பு

15

திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனகுடா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை (22) காலை 10.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடையாளம் காணப்படாத குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group