கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

21

அசாம் மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு.

அசாம் மாநிலத்தில் ஏற்கனவே ராகுல் நடைபயணத்திற்கு தடைகள் ஏற்படுத்துவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
.
அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 25-ந்தேதி வரை அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசாம் துறவியும், அறிஞருமான ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் அமைந்துள்ள படத்ராவா சத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்தி இன்று காலை சென்றார்.

அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், “நாங்கள் கோவிலில் தரிசனம் செய்ய சென்றோம். என்னால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Join Our WhatsApp Group