உலக சாதனை புத்தகத்தில் திமுக இளைஞரணி மாநாட்டு அரங்கம்

18

1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல்.
9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான ஏற்பாடு.
சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோமாக காட்சியளித்தது.

சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டது. மாநாட்டு திடலில் லட்சக்கணக்கானோர் மாநாட்டை கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய ‘ற்காலிக மாநாட்டு அரங்கம்’ என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த அரங்கம் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group