அயல்நாட்டில் வாழும் உக்ரைனியர்களுக்கு இரட்டை குடியுரிமை – ஜெலன்ஸ்கி உறுதி

17

2022 பிப்ரவரி 24 அன்று ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை “சிறப்பு ராணுவ நடவடிக்கை” எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.ீபோர் தொடங்கி 2 வருட காலம் நிறைவடைய உள்ள நிலையில் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பெரும் கட்டிட சேதங்கள் ஏற்பட்டும், போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் இல்லை.1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன.தேசிய ஒற்றுமை தினம் எனும் பெயரில் இந்த இணைப்பை கொண்டாடும் விதமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:

அயல்நாட்டில் வாழும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களுக்கு நன்றி. ஆக்கிரமிப்பின் போது உக்ரைனுக்கு முழு ஆதரவும் வழங்கிய அவர்களுக்கு நன்றி.உக்ரைனுக்காக போரிட வந்த அயல்நாட்டில் வசித்த நம் நாட்டினருக்கும் நன்றி.நம் நாட்டில் இரட்டை குடியுரிமை முறை இல்லாததால், அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், உக்ரைன் பாஸ்போர்டை வைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.வெர்கோவ்னா ராடாவில் (உக்ரைன் பாராளுமன்றம்) ஒரு புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் அயல்நாட்டில் வசிக்கும் நம் நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பாராளுமன்ற ஒப்புதல் கிடைத்து இந்த வரைவு சட்டமாக ஒரு வருட காலம் ஆகும்.ரஷிய படைகளின் தாக்குதல் குறித்த செய்தி கேட்டவுடம் அயல்நாடுகளில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் தாய்நாட்டை காக்க உடனடியாக திரும்பி வந்தனர். அவர்களில் பலர் தங்களை ராணுவத்தில் இணைத்து கொண்டனர்.

Join Our WhatsApp Group