இஸ்ரோவுக்கு உயரிய விருதை வழங்கிய ஐஸ்லாந்து

28

நிலவின் தென் துருவப் பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த (14.07.2023) திகதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த (23.08.2023) ஆம் திகதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியது. இந்தச் சாதனைக்கு பிறகு உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளன.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கௌரவித்துள்ளது.இஸ்ரோவுக்கு 2023-லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கியது.இதனை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதுவர் ஷியாம் பெற்றுக்கொண்டார்.இந்த விருதை வழங்கியதற்காக ஐஸ்லாந்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group