25 கிலோகிராம் எடையில் அரிய காண்டாமிருகம் பிறந்தது!

29

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் அரிய சுமத்ரா வகைக் காண்டாமிருகம் பிறந்துள்ளது.டெலிலா (Delilah) என்ற பெண் காண்டாமிருகம் அந்த ஆண் காண்டாமிருகக் குட்டியைப் பெற்றெடுத்தது.

அதன் எடை சுமார் 25 கிலோகிராம்.அதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.இந்தோனேசியாவின் இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ்வேய் கம்பாஸ் தேசியப் பூங்காவில் பிறந்துள்ள 5ஆவது காண்டாமிருகம் அது.இந்த ஆண்டு செப்டம்பரில் அதே பூங்காவில் இன்னொரு சுமத்ரா வகைக் காண்டாமிருகம் பிறந்தது.

உலகில் அந்த வகைக் காண்டாமிருகங்கள் 80க்கும் குறைவாகவே எஞ்சியிருக்கின்றன. அவை அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன.

Join Our WhatsApp Group