அர்ஜென்டினா நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் தானாக குணமடைந்துள்ள விவகாரம் மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் HIV வந்து தானாக குணமடைந்த 2வது நோயாளி என்ற பெயரை இவர் பெற்றுள்ளார். இதுதொடர்பாக ஆய்வு நடத்திய மாசசூசட்ஸ் பொது மருத்துவமனையின் ரீகன் கழகத்தைச் சேர்ந்த மத்தியாஸ் லிட்சர்பீல்ட் மற்றும் ஹார்வர்ட் ஆகியோர் கூறுகையில், இந்த நோயாளியின் எச்ஐவி தானாக குணமடைந்துள்ளது. இவரிடமிருந்து 1.2 பில்லியன் செல்களை எடுத்து ஆராய்ந்தோம். ஆனால் எச்ஐவி அவரிடம் இல்லை. அது முற்றிலும் மாயமாகியுள்ளது.

கடந்த ஆண்டுதான் அவர் ஒரு குழந்தைக்குத் தாயானார். அவரது தொப்புள் கொடி ஆய்வுக்காக பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் உள்ள 500 மில்லியன் செல்களை ஆராய்ந்தோம். அதிலும் எச்ஐவி அடையாளமே இல்லை. இப்படி பல வகை சோதனைகளிலும் அவரிடம் எச்ஐவி அடையாளமே இல்லாதது கண்டு ஆச்சரியமடைந்தோம்.

அவரது உடலிலிருந்து எச்ஐவி முழுமையாக போய் விட்டது. இதுபோன்று குணமடைய வாய்ப்பே இல்லை. அரிதிலும் மிக அரிதான கேஸ் இது. இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே இப்படி குணமாகியுள்ளார். இது உலக அளவில் 2வது கேஸ். இந்த கேஸ் எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது என்றார்.

பொதுவாக எச்ஐவி பாதிப்புக்குள்ளானோர் குணமடைவது இல்லை. அந்த வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அதை குணப்படுத்த முடியாது. எச்ஐவி பாதிப்புக்குள்ளானோர் மருந்துகளை எடுத்துக் கொண்டு நீண்ட காலம் முடியும். அதேசமயம், அந்த நோயை குணப்படுத்த முடியாது. ஒரு வேளை எச்ஐவியின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தாலும் கூட வைரஸ் உடலை விட்டுப் போகாது. இந்த நிமிடம் வரை எச்ஐவியை குணப்படுத்த உலகில் எந்த மருத்துவரிடமும் மருந்து இல்லை என்பதே நிதர்சனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here