இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இந்திய அரசாங்கம் மீள கோரியதாக வெளி வருகின்ற தகவல்களை இலங்கை அரசாங்க தரப்பு முற்றாக நிராகரித்துள்ளது.
இதுகுறித்து நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “குறித்த 400 மில்லியன் டொலர்களை இந்தியாவுக்கு ஏற்கனவே மீள செலுத்திவிட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் வழங்கிய உறுதிமொழியை காப்பாற்றத் தவறிவிட்டதாக இந்தியா, இலங்கை மீது பாரிய விமர்சனம் ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது.
சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புக்கள் காரணமாக இலங்கை, கொழும்பு துறைமுகத்தின் மிகச்சிறிய பரப்பளவை கொண்ட மற்றும் விசாலமாக கப்பல்களை நிறுத்திவைக்க முடியாத மேற்கு முனையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடும் அதிருப்தியில் உள்ள இந்திய 400 மில்லியன் டொலர் கடனை மீள கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும் இந்த தகவலை முற்றாக மறுத்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, 400 மில்லியன் டொலர்களை இந்தியாவுக்கு திருப்பி செலுத்தி விட்டதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இந்த தொகையை இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் இந்த கடன் தொகையை பெற்றிருந்தது.
தற்போது, மேலுமொரு கடனை பெற்றுக்கொள்வது பற்றி இந்தியாவுடன் ஆலோசனை நடத்திவருவதாக” நிதி ராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் செய்தியாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.