மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

16

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படும் நிலையில், வரும் பிப். 18 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜைகள் நிறைவுபெற்று நடை அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று திறக்கப்படவுள்ளது.

மாசி மாத பூஜைக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர விளக்கு சீசனில் சுமாா் 50 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்ததாகவும் திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு முன்னதாக தெரிவித்தது.

Join Our WhatsApp Group