பூஜையுடன் தொடங்கிய மெட்ராஸ்காரன்

16

நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.எஸ்.ஆர். புரோடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதிய படத்திற்கு மெட்ராஸ்காரன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் ஆக்ஷன் டிராமா கலந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூஜை, எளிமையாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பொன்ராம், “வாலி என் நண்பர் ஒவ்வொரு படத்திலும் திரைக்கதை பணிகளின்போது பேசிக்கொள்வோம். மிகத்திறமையானவர் அவரின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது. ஷேன் நிகாம் எனக்குப் பிடித்த நடிகர், கலையரசனும் என் நண்பர்.”

“இந்தக்குழுவே மிகவும் உற்சாகம் தரக்கூடிய குழுவாக உள்ளது. இவர்கள் சிறப்பான ஒரு படத்தைத் தருவார்கள் என நம்புகிறேன் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.”இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

Join Our WhatsApp Group