தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா

17

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி மனோஜ் கமகே, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இன்று (13) முதல் அவர் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக சட்டத்தரணியாக பணியாற்றியதாகவும், பணிப்பாளர் என்ற வகையில், நிறுவனத்தில் நிலவிய பல குறைபாடுகளை சீர்செய்வதற்கு உரிய தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும் மனோஜ் கமகே கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Join Our WhatsApp Group