கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

13

பமுனுகம, உஸ்வதகேயாவ முதலாம் குளத்திற்கு அருகில் கடற்கரையில் கடலில் குளித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் பதுளையை வசிப்பிடமாகவும் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சக அதிகாரிகள் குழுவுடன் கடற்கரைக்கு அப்பால் கடலில் குளித்த போதே கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Join Our WhatsApp Group