யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – வாணி போஜன்

21

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான வாணி போஜன் தனியார் நகைக்கடையின் சென்னை கிளையை திறந்து வைத்தார். பிரமாண்டமாக துவங்கப்பட்ட வில்வா ஜூவல்ஸ்-ஐ விளக்கேற்றி துவக்கி வைத்த வாணி போஜன், கடையில் உள்ள நகைகளை பார்த்து ரசித்தார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாணி போஜன், “சினிமாவில் மசாலா படத்தை பார்ப்பதை விட நல்ல கருத்துள்ள படங்களை பார்ப்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமூக கருத்துள்ள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.

அரசியலுக்கு இவர்கள் தான் வரவேண்டும், இவர்கள் வரக்கூடாகு என்றில்லை. நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். செங்கலம் வெப் சீரிசில் நடிக்கும் போது, அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்பவும் அந்த ஆசை இருக்கு.அரசியலில் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன செய்வார் என்பதை பார்க்கலாம். இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று, சமூக வலைதளம் குறித்த படம் இப்போது வெளியாக வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Join Our WhatsApp Group