தொடரும் சாபம்! ஆண் வாரிசுகளை காலி செய்யும் கோஹினூர் வைரம்.. இப்போது பிரிட்டன் மன்னருக்கும் கேன்சர்!

28

பிரிட்டன் மன்னரான சார்லசுக்கு கேன்சர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது கோஹினூர் வைரத்தின் சாபம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

பிரிட்டன் மன்னராக சார்லசுக்கு கடந்த மே 2023இல் முடிசூடப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாகப் பிரிட்டனில் தலைமை பொறுப்பில் இருந்த ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்றார்.

இதற்கிடையே அவர் பதவியேற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில், அவருக்கு கேன்சர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் அவர் அரச பணிகளில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸுக்கு கேன்சர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மீண்டும் பிரிட்டன் மன்னர் குடும்பம் வசம் இருக்கும் கோஹினூர் வைரம் குறித்தும் அந்த கோஹினூர் வைரத்தின் சாபம் குறித்த விவாதத்தையும் இணையத்தில் கிளப்பியுள்ளது. அதென்ன கோஹினூர் வைரம்.. இந்த வைரத்தின் சாபம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய ஆபரணங்களில் ஒன்று 105.6 காரட் கோஹினூர் வைரமாகும்.. இது எப்போதும் பிரிட்டன் மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருக்கும்.. அதன்படி இது தற்போதைய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலாவுக்கு சொந்தமானதாக இருக்கிறது. கோஹினூர் வைரத்தை வைத்திருந்த எல்லா மன்னர்களும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை அல்லது உயிரை இழந்ததாகக் கூறப்படுகிறது.

பாஜக-அதிமுகவுக்கு ‛முட்டை’.. தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெல்லும் திமுக கூட்டணி! இந்தியா டூடே சர்வே பாஜக-அதிமுகவுக்கு ‛முட்டை’.. தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெல்லும் திமுக கூட்டணி! இந்தியா டூடே சர்வே

கோல்கொண்டா பகுதியில் உள்ள குல்லூர் சுரங்கத்தில் தான் கோஹினூர் வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது முதலில் இந்து தெய்வத்தின் சன்னதியில் வைக்கப்பட்டு, தெய்வத்தின் கண்ணாகக் கருதி பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு 1310இல் இந்த வைரம் கில்ஜி மன்னர் வம்சத்திடம் சென்றதாகவும் அதன் பிறகு இது பல்வேறு மன்னர்கள் வசம் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை வைத்திருந்த அனைத்து மன்னர்களும் அழிந்தே போனார்கள் என்ற கதையும் உலா வருகிறது.

1628இல் கோஹினூர் வைரத்தைக் கொண்ட ஒரு மயில் வடிவிலான சிம்மாசனத்தை உருவாக்க ஷாஜகான் உத்தரவிட்டார். இந்த மயில் சிம்மாசனம் 1739இல் பாரசீக மன்னர் நாதர் ஷா வசம் சென்றது. பல ஆண்டுகள் அது ஆப்கானிஸ்தானிலேயே இருந்தது. இதற்கிடையே 1813இல் மகாராஜா ரஞ்சித் சிங் ஆப்கானிஸ்தான் துரானி மன்னரை வீழ்த்திய பிறகு, கோஹினூர் மீண்டும் இந்தியாவுக்குள் வந்தது. இருப்பினும், 1839இல் ரஞ்சித் சிங் உயிரிழந்த நிலையில், அவரது 11 வயது மகன் துலீப்பிற்கு அழுத்தம் கொடுத்து வைரத்தைப் பிரிட்டனிடம் ஒப்படைக்கும் ஆவணத்தில் கிழக்கிந்திய நிறுவனம் கையெழுத்து பெற்றுள்ளது.

கோஹினூர் வைரம் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் சென்ற சில ஆண்டுகளில். 1857 கிளர்ச்சியில் கிழக்கிந்திய கம்பெனி அழியும் நிலைக்குச் சென்றது. அதன் பின்னரே பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியா சென்றது குறிப்பிடத்தக்கது.

கோஹினூர் வைரத்தை வைத்திருந்த கில்ஜி பேரரசு, துக்ளக் பேரரசு, முகலாய பேரரசு, துரானி வம்சம் அழிந்து போனது. அதேபோல கோஹினூர் வைரம் வந்த பிறகே ரஞ்சித் சிங்கும் மறைந்தார். கோஹினூர் வைரத்தின் சாபம் காரணமாகவே இதை வைத்திருக்கும் மன்னருக்கு அழிவு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த கோஹினூர் வைரத்தின் சாபம் குறித்து பிரிட்டனின் அரச குடும்பத்திற்கும் தெரியும் என்றே சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே இதுவரை பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு ஆண் வாரிசும் இதை அணியவில்லை. பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே கோஹினூர் வைரத்தை அணிந்துள்ளனர். இப்போது இந்த வைரம் ராணி கமிலா வசம் வந்துள்ளது. கடந்தாண்டு நடந்த முடிசூட்டு விழாவில் கமிலா இந்த வைரத்தைக் கொண்ட கிரீடத்தை அணியவில்லை என்ற போதிலும், சில மாதங்களில் மன்னர் சார்லஸுக்கு கேன்சர் ஏற்பட்டுள்ளது. இது கோஹினூர் வைரத்தின் சாபம் குறித்த பேச்சு அதிகரித்தே உள்ளது.

Join Our WhatsApp Group