1900 பேரை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசொப்ட்

63

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசொப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் ப்லிசர்ட்-இல் பணியாற்றுவோர் ஆவர்.

ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசொப்ட் அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் தான் மைக்ரோசொப்ட் நிறுவனம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 621 கோடி ரூபாய்க்கு ஆக்டிவிஷன் ப்லிசர்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் மைக்ரோசொப்ட் நிறுவனம் கேமிங் பிரிவில் அதிக கவனம் செலுத்தவும், கேமிங்கில் முன்னணியில் உள்ள சோனியை எதிர்கொள்ளவும் திட்டமிட்டது.

Join Our WhatsApp Group