மைத்திரிபால சிறிசேனவின் மகளின் வீட்டை உடைத்து திருட்டு

17

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் இரண்டு மாடி வீட்டை உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை திருடியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை, விக்கிரமசிங்க பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர் குறித்த வீட்டிற்கு வந்த போது வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில், சில நபர்களால் வீட்டின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வீட்டின் அலுமாரியில் இருந்த 150,000 ரூபா பெறுமதியான பணம், தங்கத்தினால் செய்யப்பட்ட சிலை, கைக்கடிக்காரம், 8 சிங்கப்பூர் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group