பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைப்பதற்கான அவசர தேவை என்ன…? – எரான் எம்பி

11

“பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைப்பதன் நோக்கம் என்னவாக இருக்குமோ தெரியாது.ஏன் இந்த அவசரமோ தெரியாது? ஏதாவது ஒரு உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது” என்ன ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரம ரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று ( 21/01/2024 ) கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஊடக சந்திப்பில் எரான் விக்ரம ரத்ன தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம் ;

*உரிய தரப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாது சட்ட மூலங்களை ஏன் அவசரமாக கொண்டு வருகின்றனர். பல்பக்க கலந்துரையாடல் அவசியம்.சட்ட மூலத்தை கொண்டு வரும் போது,வழிமுறை முக்கியம்.

*பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உண்டு.இங்கு எந்த வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

*PTA சட்டம் தற்போதும் உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அவசரமாக கொண்டு வருகின்றனர்.

*ஜனநாயக கட்டமைப்பில் கேள்வி எழுப்பும் உரிமை பாராளுமன்றத்திற்கே உண்டு.

*நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் பெயரலவில் சிறந்தது.பெண்கள் சிறுவர்களை பாதுகாக்கவே இதை கொண்டு வருகின்றனர் என்கின்றனர்.ஆனால் குறித்த சட்ட மூலத்தில் இந்த வசனங்கள் இல்லை.எதையோ கூறி எதையோ நிறைவேற்றுகின்றனர்.நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஏன் இந்த அவசரம்?

*தனிநபர்களின் சுயாதீனத்திற்கு இது பெரும் சவாலும் பாதிப்புமாகும்.

*இன்று உண்மையான செய்தி நாளை பொய் என்று கூறலாம்,சட்டத்தின் பிரகாரம் பொய்யை வரையறைப்பதும் தீர்மானிப்பதும் யார்? இங்கு தான் பெரும் பிரச்சினை. ஜனாதிபதியின் கீழே இந்த அதிகாரம் வருகிறது.ஏகாதிபத்திய நிர்வாகத்திற்கான ஏற்பாடே இங்கு நடந்து வருகிறது.

*ஏகாதிபத்தியத்தியத்திற்கு இடமளிக்க முடியாது.தேர்தல் வருடத்தில் ஜனநாயக விரோத சட்டங்களை கொண்டு வந்து மக்களின் கருத்து பேச்சுரிமைகளை நசுக்கவும் ஒடுக்கவும் முடியாது.தனிநபர் பாதுகாப்பு இல்லாது போகுறிது.
நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

*அரசாங்க கணக்கெடுப்பின் பிரகாரம் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு 65 ரூபா மாதந்த அடிப்படை செலவுகளுகக்கு தேவை என்று கூறிறது.இதற்கு பின்னரான சுயாதீன ஆய்வொன்று 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு 84 ஆயிரம் ரூபா தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.இந்நாட்டில் பெரும்பாலானவர்களின் மாதாந்த சம்பம் 50 ஆயிரம் அளவிலயே இருக்கிறது.

  • 2019 மத்திய நடுத்தர வருமானம் கொண்ட நாடாக நாம் மாற்றினோம்.அன்று வரி அறவிட்டோம்.வரி செலுத்த முடியுமானவர்களிடமிருந்தே அன்று அறவிட்டோம்.பின்னர் வந்த அரசாங்கம் இதை இல்லாதொழித்தது.இன்று வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

*வாழ்க்கைச் செலவு அதிகம்.அரச வருமானத்தை அதிகரிப்பது யாரிடமிருந்து என்பதே இங்கு பிரச்சினை.VAT வரிக்கு இதனாலையே எதிர்த்தோம்.

*பெரிய கடன் பெறுநர்களின் கடன்களை விடுவித்துள்ளனர்.சாதாரண மனிதர்களின் கடன்களை அறவிட வேறு நடைமுறையை பின்பற்றுகின்றனர்.இது பிழையான நடவடிக்கை.

*ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வரி அறவிடுவோம்.போட்டித் தன்மையை ஏற்படுத்துவோம்.தனியாருக்கும் இடம் வழங்குவோம்.சமூக பாதுகாப்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்போம்.

*கடன்களை செலுத்த முடியாதவர்களிடமிருந்து கடன்களை அறவிட குற்றவியல் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.இதன் ஊடாக நடவடிக்கை எடுக்க முற்படுகின்றனர்.இதற்கு நாம் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

Join Our WhatsApp Group