தாமதமாகத் தொடங்கிய இசை நிகழ்ச்சி… மடோனா மீது வழக்குத் தொடுத்த ரசிகர்கள்

20

தாமதமாகத் தொடங்கிய இசை நிகழ்ச்சி…மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.அதனால் பிரபல இசைக் கலைஞர் மடோனா (Madonna) மீது வழக்குத் தொடுத்துள்ளனர் இரு ரசிகர்கள்.சென்ற ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டுகளை வாங்கியதாக மைக்கல் பெல்லோவ்ஸும் (Michael Fellows) ஜானதன் ஹேடனும் (Jonathan Hadden) கூறினர்.இரவு 8.30 மணிக்குத் தொடங்கவேண்டிய இசை நிகழ்ச்சி 10.30 மணிக்குத்தான் ஆரம்பித்தது.நிகழ்ச்சி முடிவதற்கு அதிகாலை ஒரு மணியாகிவிட்டது.அந்த நேரத்தில் வீடு திரும்புவதற்குப் போக்குவரத்து அதிகம் இல்லை.நிகழ்ச்சியைத் தாமதமாகத் தொடங்கியது மனசாட்சியற்ற, நியாயமற்ற, ஏமாற்றும் வர்த்தக நடைமுறை என இருவரும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

Join Our WhatsApp Group