கும்பாபிஷேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி

18

ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பூ மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி “இந்த வரலாற்று தருணம் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேலும் செழுமைப்படுத்தி நமது வளர்ச்சி பயணத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group