கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஸ்ரீதரன் அஞ்சலி!

15

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று (22) கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக நேற்று (22) நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 49 வாக்குகளை மேலதிகமாக பெற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவானார்.

இந்தநிலையில், சமய வழிபாடுகளை தொடர்ந்து அவர் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Join Our WhatsApp Group