UPDATE :தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஸ்ரீதரன் எம் பி : 184 வாக்குகள்

46

சிவம் பாக்கியநாதன்

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக எம்.ஏ. சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இந்த இரகசிய வாக்கெடுப்பின் இறுதி முடிவு சற்று நேரத்துக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 184 வாக்குகளை பெற்று இவர் தெரிவு செய்யப்பட்டதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.


இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் 137 வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி, 47 மேலதிக வாக்குகளினால் ஸ்ரீதரன் எம்பி தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த வாக்கெடுப்பில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் 340 பேரும் வாக்களித்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார் என இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரன் எம்பி அங்கு கருத்து தெரிவிக்கும் போது, சகலரும் ஒன்றுபட்டு தமிழர் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு திட சங்கற்பம் பூண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

(சிவம் பாக்கியநாதன்)

Join Our WhatsApp Group