வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் எமது இலட்சியத்துக்கான பயணம்- எம்.ஏ.சுமந்திரன்

23

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (21) நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்து இலட்சியப் பயணத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பாரம்பரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு வாக்கெடுப்பு மூலமாக தலைமைத்தெரிவு நடைபெறவுள்ளமையானது உட்கட்சி ஜனநாயகத்தினை உறுதிப்பத்துவதாக உள்ளது.

அத்துடன், வடக்கு,கிழக்கு மட்டுமல்ல தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் முன்னுதரணமாக இருக்கும் வகையில் வாக்கெடுப்பின் மூலமாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளது.

வெற்றி அடைந்தவர், தோல்வி அடைந்தவர் என்ற நிலைமைகள் தோற்றம்பெற்று கட்சிக்குள் அக முரண்பாடுகள் வலுத்துவிடும் என்று பல்வேறு பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

உண்மையில் கட்சியின் தலைமைத்தெரிவு என்பது உட்கட்சி விவகாரம். அத்துடன் கட்சியின் அங்கத்தவர்கள் தமக்கான தலைவரை நேரடியாக வாக்களித்து தெரிவு செய்யப்போகின்றார்கள். இதனால் எவ்விதமான குழப்பங்களும் ஏற்படப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரையில், தலைமைக்கான தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் எமது இட்சியப்பயணத்துக்கான அனைவரையும் ஒன்றிணைத்த செயற்பாடுகள் தொடரும். 

Join Our WhatsApp Group