அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

19

டமாஸ்கஸ்-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். முன்னதாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக இருந்த நிலையில், தற்போது 10-ஆக அதிகரித்து இருக்கிறது.”இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் முழுமையாக சேதமுற்றது. பொதுமக்கள் வசித்து வந்த குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டுள்ளது.”

“தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்டன. இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது,” என சிரியாவில் உள்ள மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

Join Our WhatsApp Group