சிறப்பு கட்டுரை: தமிழரசு கட்சித் தலைமைக்கு கடும் போட்டி ; வெல்லப்போவதுசுமந்திரனா? ஸ்ரீதரனா?

114

வடக்கு, கிழக்கில் ஓர் ஒப்பீடு

இலங்கைத் தமிழரசு கட்சிக்குரிய அடுத்த தலைவர் யார்? . இதுதான் என்று தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்வி. தமிழரசு கட்சி வரலாற்றில் தவிர்க்க முடியாத போட்டி களமாக மாறி இருக்கும் தலைமைக்கு மூவர் போட்டியிடுகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் தலைமைக்கு தகுதியானவர்கள் என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.

இவர்களில் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமந்திரனும் ஸ்ரீதரனும் இதில் தீவிரமாக இருக்கிறார்கள். யோகேஸ்வரனை பொறுத்த அளவில் ஸ்ரீதரனுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது.

இந்த நிலையில், வடக்கு,கிழக்கில் இருவரினதும் பணி எப்படி இருந்தது…?

இதனை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறார் எழுத்தாளர் சோமசூரியம் திருமாறன்.

தலைவராக வர மூவர் விண்ணப்பித்த போதும் ஒருவர் தனது ஆதரவை இன்னொருவருக்கு அளிப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான Mathiaparanan Abraham Sumanthiran அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபருமான #சிறிதரன் அவர்களுக்கும் இடையில் பலப்பரீட்சை இடம் பெற இருக்கின்றது.

இதுவரை காலமும் தமிழரசு கட்சி தங்கள் தலைவரை ஏகமனதாக தீர்மானித்து ஒருவரை தெரிவு செய்ததுதான் சரித்திரம். ஆனால் முதல் முறையாக தேர்தல் முறை மூலமாக தங்களுடைய தலைவரை தேர்வு செய்யப் போகிறது இலங்கை தமிழ் அரசுக் கட்சி.

இந்நிலையில் சிலர் தங்களுக்குள்ளேயே ஒரு புரிந்துணர்வுடன் ஒருவருக்கு விட்டுக் கொடுக்க முடியாதவர்களுக்கு எதற்கு கட்சி, அரசியல் என்கின்ற காழ்ப்புணர்ச்சியில் சில கருத்துக்களை பதிவிடுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. வாக்கெடுப்பும் தேர்தலும் ஒருவகை ஜனநாயக இணக்கப்பாடே.

மேலும் சமூக வலைத்தளங்களில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான கொள்கையுடைய அரசு சார் கட்சியில் பயணிப்பவர்கள் யார் தலைவராக வந்தால் தங்களுக்கு சாதகமோ அவரை தாங்கள் தலைவராக வரவேண்டும் என்று மக்கள் மத்தியில் பரப்புரை செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் நடக்கவிருக்கும் தலைவருக்கான தேர்தல் மக்கள் வாக்களிக்கும் தேர்தல் அல்ல தமிழ் அரசுக் கட்சியின் தொகுதிகளின் உறுப்பினர்களே தங்களது தலைவர்களை தெரிவு செய்ய இருக்கின்றார்கள் ஆகவே இந்த அறுவடைகள் சற்று அமைதியாக இருந்தால் போதும்.

எது எப்படியோ எதிர்வரும் தை மாதம் 21 ஆம் திகதி ஜனநாயக முறையான தேர்தல் மூலம் தங்களது அடுத்த தலைவரை தேர்வு செய்ய தயாராகிறது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி.

இந்த நிலையில் வெல்லப்போவது யார் சுமந்திரனா? அல்லது சிறிதரனா?

வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் இருவருடைய பலமும் பலவீனமும் எப்படி இருந்தாலும் கிழக்கு மாகாண தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் தங்கள் வாக்களிக்க முன் கடந்த கால அனுபவங்களை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

எனது நாட்குறிப்பேட்டில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் சுமந்திரன் அவர்களுடைய பங்களிப்பும்
சிறிதரன் அவர்களுடைய பங்களிப்பும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் எவ்வாறு இருந்தது என்பதை பார்ப்போம்.

சுமந்திரன் அவர்களுடைய பங்களிப்பு

2023.11.17 – மயிலத்தனை மாதவனை பண்ணையாளர்களும் தமிழ் தேசிய ஆதரவாளர்களுக்கும் எதிராக ஏறாவூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு பண்ணையாளர்களுக்கு ஆதரவாக ஆஜராகி இருந்தார்!

அதே தினம் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மேற்படி பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு ஆதரவாக ஆஜராகி இருந்தார்!

அதே தினம் மட்டக்களப்பில் இடம்பெற இருந்த மாவீரர் நினைவேந்தலுக்கு தடை செய்யும் முகமாக ஒரு தடை உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்திலே
கோரப்பட்டிருந்தது அதை எதிர்த்து அந்த தடை உத்தரவை இரத்து செய்தார்!

அதே தினம் கச்சேரியில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு எதிராக தமிழ் தேசிய பற்றாளர்கள் 30 பேருக்கு எதிராக மட்டக்களப்பு பொலீசாரால் தொடரப்பட்ட வழக்குக்கு ஆதரவாகவும் ஆஜராகி இருந்தார்!

2023.02.04 – கறுப்பு சுதந்திர தினத்திற்காக வருகை தந்திருந்தார்!

2022.02.22 – துறைநிலாவணைக்கு வருகை தந்து அங்கு ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தார்!

2022.04.30 – GoHomeGotta ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருந்தார்!

2022.08.22 – காரைதீவு மட்டக்களப்பு மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் எனும் நிகழ்வுக்காக வருகை தந்திருந்தார்

2022.12.24 – நீரோ எனும் அமைப்பின் ஊடாக மட்டக்களப்பை சேர்ந்த 1000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்!

வாழைச்சேனை பாடசாலை மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்காக வருகை தந்திருந்தார்!

அதே தினம் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தினுடைய இரத்ததான முகாமிற்கு அதிதியாக வந்திருந்தார்!

2021.02.02 – திருகோணமலையில் வழக்கில் ஆஜராகி விட்டு, பிற்பகல் மட்டக்களப்பில் கலந்துரையாடல் முடித்துவிட்டு இரவோடிரவாக P2P போராட்டத்திற்காக வருகை தந்து அந்த போராட்டத்தின் ஆரம்ப நாள் முதல் பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பொத்துவிலிருந்து அந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்

2021.03.26 – P2P வழக்குக்காக வருகை தந்திருந்தார் அன்றைய தினம் அவர் வரும்போது அவருடைய வாகனம் விபத்து ஏற்பட்டு எப்படியாக எனது வழக்கிற்கு வர வேண்டும் என்பதற்காக வேறொரு வாகனத்தை வாடகைக்கு அமைத்து வருகை தந்திருந்தார்!

2021.04.30 – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வதற்காக அங்கு சென்று இருந்தார்!

2021.05.01- புளுட்டுமானேடையில் உள்ள தொல்லியல் இடங்களை பார்வையிடுவதற்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் வருகை தந்திருந்தார்!

இதே காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய #ஸ்ரீநேசன் #யோகேஸ்வரன் மற்றும் #_அரியநேத்திரன் ஆகியோருக்கு எதிராக பெறப்பட்ட தடை உத்தரவுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்!

இதே காலப்பகுதியில் கெவிலியா மடுவில் இடம் பெற்ற சிங்கள குடியேற்றங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தார்!

மயிலதனை மாதவனை பண்ணையாளர்களது இட ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையை ஆராய்வதற்காக நேரடியாக மயிலதனை மாதவனைக்கு சென்று இருந்தார்!

2021.07.24 – சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்!

2021.07.22 மாநகரசபை வழக்கிற்கு வருகை தந்திருந்தார். அன்றைய தினம் மாலை இலங்கை தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினர்களை சந்தித்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்!

2021.11.17 – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுடைய படுகொலை வழக்கு தொடர்பாக பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு ஆஜராகி இருந்தார்!

2020.02.25 பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து எடுக்கும் பேரணி ஒன்றை நாடு முழுவதும் முன்னெடுத்து மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக வருகை தந்திருந்தார்!

தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து கட்சி உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தார்!

முன்னாள் மாநகர முதல்வரது வழக்கிற்காக பல தடவைகள் வருகை தந்துள்ளார்

இந்த நிலையில் தற்போது வாகரை இல்மனைற் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான வழக்கிற்குரிய ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்,

மேலும் காயங்கேணி இறால் பண்ணைகளுக்கு எதிரான வழக்கு, PTAயில் கைது செய்யப்பட்ட சோபனனின் விடுதலை தொடர்பாக பல நடவடிக்கைகளை எடுத்து அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று ஆராய்ந்தவர்,

கொழும்பில் CT Scanner தொடர்பான பிரச்சனைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் Shanakiyan Rajaputhiran Rasamanickam உடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அண்மையில் PTAயில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்காக சாணக்கியனுடன் சென்றிருந்தார்!

சிறிதரன் அவர்களின் பங்களிப்பு

2016.04.30 – மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சி கூட்டம் ஒன்றிற்காக வருகை தந்திருந்தார்!

2021.02.04 – P2P பேரணிக்கு மட்டக்களப்பில் இருந்து வருகை தந்திருந்தார்! (ஆரம்ப நாள் வரவில்லை)

2021ம் ஆண்டு கொரோனா நிவாரணம் கொடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்கு கூட அறிவிக்காது இரகசியமான முறையில் வந்து சென்றிருந்தார்!

வடக்கிலிருந்து கிழக்கி நோக்கி எனும் பேரணிக்கு வருகை தந்திருந்தார்!

மயிலத்தனை மாதவனை போராட்டத்தின் நூறாவது நாளின் பின்னர் ஒரு தடவை வருகை தந்திருந்தார்!

இந்த நிலையில் கிழக்கு வாழ் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் யார் குத்தினால் அரிசாகும் என்பதை நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

சோமசூரியம் திருமாறன்

Join Our WhatsApp Group