மும்பையில் வசிக்கும் நடிகை ராதா, ராஜசேகரன் தம்பதிக்கு மகன் விக்னேஷ், மகள்கள் கார்த்திகா, துளசி உள்ளனர். கார்த்திகா, துளசி இருவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தனர். இந்நிலையில் கார்த்திகாவுக்கும், ரோஹித் மேனனுக்கும் நேற்று திருவனந்தபுரம் பீச் ஓட்டலில் திருமணம் நடந்தது. சிரஞ்சீவி, கே.பாக்யராஜ், ஜாக்கி ஷெராப், ராதிகா, சுஹாசினி, ரேவதி, பூர்ணிமா, மேனகா உள்பட பலர் நேரில் வாழ்த்தினர். தமிழில் ‘கோ’, ‘அன்னக்கொடி’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்களில் கார்த்திகா நடித்திருந்தார்.
