உலகக் கோப்பை.. Finals பார்த்த சமி அம்மாவுக்கு உடல்நலம் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி?

18

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை இந்திய வீரர் முகமது சமியின் தாயார் அனும் அரா உத்தர பிரதேச மாநிலத்தின் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த தனது கிராமத்தில் கண்டுகளித்தார். போட்டியின் போது பதட்டம் அடைந்த அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சை பெற மற்றொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அதன்படி சுகாதார மையத்திற்கு விரைந்த சமியின் தாயார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“அவர் காய்ச்சல் மற்றும் பதட்டம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை, சீராக உள்ளது,” என சமியின் உறவினர் மும்தாஸ் தகவல் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Join Our WhatsApp Group