நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம்- போக்குவரத்து காவல் துறை அதிரடி

50

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததை அடுத்து, தனுஷ் தனித்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் தனுஷின் 17 வயது மகனுக்கு அபராதம் விதித்து சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தலைகவசம் அணியாமலும் ஆர் 15 ரக பைக்கை ஓட்டியதாக போலீசார் அபராதம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Join Our WhatsApp Group