ஒரே பெண்ணில் இரு கருப்பைகள்… இரண்டிலும் குழந்தைகள்…

22

இரு கருப்பைகளுடன் பிறந்த பெண் இரண்டிலும் கர்ப்பமாகி இருக்கிறார். அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது கெல்சி ஹாட்சருக்கு (Kelsey Hatcher) ஏற்கனவே 3 பிள்ளைகள் உள்ளனர்.

“Uterus didelphys” என்று அழைக்கப்படும் இரு கருப்பைகளுடன் பிறக்கும் நிலை மிகவும் அரியது.உலகில் அது சுமார் 0.3 விழுக்காட்டுப் பெண்களுக்கு ஏற்படக்கூடியது. ஹாட்சர் இந்த ஆண்டு மே மாதம் வழக்கமான பரிசோதனைக்குச் சென்றபோது இரு கருப்பைகளிலும் பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது.அது மிகவும் அரிது… 50 மில்லியனில் ஒருவருக்கு ஏற்படக்கூடியது என்றார் ஹாட்சர்.

அவர் ஏற்கனவே இருக்கும் 3 பிள்ளைகளையும் ஆரோக்கியமாகப் பிரசவித்தார். இம்முறையும் சுகப் பிரசவமே ஏற்பட வேண்டும் என்பது அவரது வேண்டுதல், விருப்பம். கருப்பைகளில் இருக்கும் இரண்டும் பெண் குழந்தைகள்.கிறிஸ்துமஸ் தினத்திற்குள் குழந்தைகள் பிறந்துவிடும் என்று நம்புகிறார் அவர்.

Join Our WhatsApp Group