நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட
குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை
வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். – PMD
BUDGET 2024: அரச சில செலவினங்களில் 35 வீதம் அரச ஊழியர்களின் சம்பளத்துக்காகவே செலவீடு
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரச செலவினங்களில் 35% அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார். – PMD
BUDGET 2024#16
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் சுமை முழுவதுமாக பொதுமக்களையே சார்ந்துள்ளது எனவும், தேசிய சொத்துக்கள் எனக் கூறித் தொடர்ந்தும் மக்கள் மீது அச்சுமையை சுமத்தும் அரசியல் குழுக்கள் நாட்டை பின்னடையச் செய்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
BUDGET 2024: நுவரெலிய தபாலக விவகாரம் : பிரதேச அபிவிருத்திக்கு உட்பட்ட விடயம்
சுற்றுலாத் துறைக்காக நுவரெலியா தபால் அலுவலகம் ஒதுக்கப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனவும், மாறாக அது நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமே எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வரலாற்று சிறப்புமிக்க புராதனக் கட்டிடங்களை உரிய நேரத்தில் சுற்றுலாத் தொழில்துறை போன்ற அந்நியச் செலாவணி ஈட்டும் பணிகளுக்குப் பயன்படுத்தாவிட்டால் காலி தபால் அலுவலகத்துக்கும் நேர்ந்த கதியே இதற்கும் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார். – PMD