250,000 பவுண்டுக்கு விலைபோன மைக்கல் ஜாக்சனுடைய மேல் சட்டை!

17

பிரபலப் பாடகர் மைக்கல் ஜாக்சன் (Michael Jackson) அணிந்திருந்த மேல் சட்டை (jacket) 250,000 பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனை ஆகியிருக்கிறது.1984ஆம் ஆண்டு அவர், அந்தக் கறுப்பு – வெள்ளை மேல் சட்டையை Pepsi நிறுவனத்திற்கான ஒரு விளம்பரத்தில் அணிந்திருந்தார்.

அது, அதிகபட்சம் 400,000 பவுண்டுக்கு விலைபோகும் என்று மதிப்பிடப்பட்டது.Pepsi விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றின்போது ஜாக்சனின் முடி தீப்பற்றிக்கொண்டதாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.அப்போது அவர் கடுமையாகக் காயமுற்றார்.அந்தப் படப்பிடிப்பின்போது அவர் வேறொரு மேல் சட்டையை அணிந்திருந்ததாக BBC குறிப்பிட்டது.

லண்டன் நகரில் நடைபெற்ற ஏலத்தில், மேலும் பல பிரபலப் பாடகர்களின் 200க்கும் அதிகமான பொருள்கள் ஏலமிடப்பட்டன.2007ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாடகி ஏமி வைன்ஹவுஸ் (Amy Winehouse), பாடல் காணொளி ஒன்றில் அணிந்திருந்த சிகை அலங்காரப் பொருள் 18,750 பவுண்டுக்கு ஏலம் போனது.

Join Our WhatsApp Group